
மகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதியான தேவதாசனின் போராட்டம் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்னும் இரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்க்கிப்படும் என்று அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து, நீர் அருந்தி, தேவதாசன் தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.