Home உலக செய்திகள் பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் பொறிஸ் ஜோன்ஷன்:

பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் பொறிஸ் ஜோன்ஷன்:

195
0

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறிஸ் ஜோன்ஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பிரதமராக உள்ள தெரேசா மே தான் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அக் கட்சிக்குள் யார் அடுத்த பிரதமர் எனும் குழப்பம் நிலவியது.

ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான பிறக்ஸிட் விவகாரத்தால் பெரும் ஆட்டம் கண்டுள்ள பிரித்தானியாவை தலைமை தாங்கி நடாத்த யார் சரியான நபர் என பலப் பரீட்சைகள் இடம்பெற்று வந்த நிலையில், ஆளும் கட்சியான கன்ஸவர்ட்டி கட்சியின் தலைவராக யார் தெரிவாகிறாரோ அவரே அடுத்த பிரதமர் எனும் முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கமைய அக் கட்சிக்குள் நடாத்தப்பட்ட தேர்தலில் பொறிஸ் ஜோன்ஷன் இரட்டிப்பு பெரும்பான்மையுடன் தெரிவாகியுள்ளார்.

இதனால் பிரித்தானியாவின் அடுத்த (புதிய) பிரதமர் பொறிஸ் ஜோன்ஷன் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் (24/07/2019) புதன்கிழமை தெரேசா மே இடம் இருந்து பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஏற்று புதிய பிரதமராகவுள்ளார் பொறிஸ் ஜோன்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.