Home உலக செய்திகள் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்…? இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவு!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்…? இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவு!

246
0
Next UK PM 2019

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் அந்நாட்டு பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் தோல்வியடைந்த இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான தெரசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் என தீர்மானிப்பதில் பழமைவாத கட்சிக்குள் இழுபறிகள் இடம்பெற்று வந்தது.

பிந்நர் பழமைவாதக் கட்சியான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆவார் என்ற நிலையில் அதற்கான தேர்தல் நடைபெற்றது.

இத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இன்று (23/07) வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதில் இங்கிலாந்தின் லண்டன் மேயராகவும், முன்னாள் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றிய பொறிஸ் ஜோன்சன் எதிர்த்து போட்டியிடும் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண் ஐ பின் தள்ளி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.