Home உலக செய்திகள் இனப்படுகொலையின் சாட்சியங்களை சுமந்து சென்ற “எம்.வி சண்சீ” கப்பலின் இறுதி நாட்கள்!

இனப்படுகொலையின் சாட்சியங்களை சுமந்து சென்ற “எம்.வி சண்சீ” கப்பலின் இறுதி நாட்கள்!

136
0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் ஊரை, உறவை, உடைமையை இழந்து ஏதிலிகளான சுமார் 500 இலங்கை தமிழ் அகதிகளை சுமந்து கனடாவிற்கு சென்ற “எம்.வி சண்சீ” என்ற கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “எம்.வி சண்சீ” கப்பலிற்கு யாரும் உரிமை கோராததன் காரணமாக கனடிய எல்லை பாதுகாப்பு முகவருக்கு இந்த கப்பல் சொந்தமாக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி கனடிய அரசாங்கம், “எம்.வி சண்சீ” கப்பலை கனடிய சட்டங்களுக்குட்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உடைக்கப்படலாம், மொத்தமாக ஒதுக்கப்படலாம் அல்லது மறு சுழற்சிக்குள்ளாக்கப்படலாம் என்ற முடிவை எடுத்ததோடு, கப்பலை உடைப்பதற்காக 4,151,070.39 டொலர்கள் ஒதுக்கியது.

இவ் ஆண்டு (2019) இறுதிக்குள் “எம்.வி சண்சீ” கப்பல் உடைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து அக் கப்பலை அழிப்பதை விடுத்து அதை இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் தமிழர் சுமந்த வடுக்களின் அடையாளமாக பேணி பாதுகாக்க கனடிய அரசை கனடா வாழ் தமிழ் அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் அழுத்தம் கொடுப்பார்களா…?