Home உலக செய்திகள் லண்டன் – வொல்த்தம்ஸ்ரோ நகரில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து!

லண்டன் – வொல்த்தம்ஸ்ரோ நகரில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து!

145
0

கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள வொல்த்தம்ஸ்ரோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்று காலை சுமார் 7:40 மாணியளவில் இத் தீ பரவலை அவதானித்த நபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போராடினர்.

15 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் இத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல மணி நேரம் போராடி நீண்ட நேரத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் அப் பகுதியை சூழ உள்ள பகுதிகளில் பல பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டதால் போக்குவரத்துக்கள் முடங்கியதோடு மக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேறிட்டமை குறிப்பிடத்தக்கது.