Home முக்கிய செய்திகள் கன்னியாவில் பெளத்தத்தின் ஆக்கிரமிப்பிற்கு தடை விதித்தது திருகோணமலை உச்ச நீதிமன்றம்:

கன்னியாவில் பெளத்தத்தின் ஆக்கிரமிப்பிற்கு தடை விதித்தது திருகோணமலை உச்ச நீதிமன்றம்:

225
0

திருகோணமலை மேல்நீதிமன்றம் மிக முக்கியமான நான்கு விடயங்களுக்கு தடையுத்தரவை வழங்கி, இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அவர்கள் அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மாகாண மேல் நீதி மன்றத்தில் தடையுத்தரவை பெற்றதன் பின் நீதி மன்ற முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நீரூற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்த ஆதனங்கள் திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் அதனுடைய நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமணி அம்மா உள்ளார். எனவே அவர்தான் இன்று வழக்கைகின் மனுதாரராக நீதி மன்றத்திற்கு கொண்டு வந்து வெந்நீரூற்று பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரிகைகளை தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை வைத்திருக்கின்றார்.

இது சம்மந்தமான எழுத்தாணை வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற படியால் காணி தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட எழுத்தானைகளை நீதி மன்றம் வழங்க முடியும். எனவே கிழக்கு மாகாண நீதி மன்றம் இன்று 22ம் திகதி திருகோணமலை அமர்விலே எமது எழுத்தனை மனுவை பரிசீலித்து நீதி மன்ற நியாயத்திட்டத்திற்கு உட்பட்ட விடயம் கருதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல்கள் அவர்களுக்கு முறையே சேர்ப்பிக்கப்பட்டது. என்பதை உறுதி செய்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடைக்கால தடை உத்தரவு ஐந்தில் நான்கை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதில் ஒரு இடைக்கால தடையுத்தரவு பிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம். அதனை நீதி மன்றம் வழங்க வில்லை. அது சம்மந்தமாக தொல் பொருள் திணைக்களம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. எனவே வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது.

எனினும் மிக அவசரமான மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் முதலாவதாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு நீதி மன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அடுத்தாக ஆலயத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் செல்பவர்களிடம் டிக்கட் விற்று பணம் பெறக் கூடாது என்றும் சுதந்திரமாக இந்து மக்கள் சென்று வர வேண்டும் என்றும் அதனை அவரும் தடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாக இந்த ஆதனங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமணி அம்மா அவர்களும் அவர்களின் முகவர்களும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்காவதாக மிகுதிப் பிரதேசத்தை அதாவது பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று உள்ள இடத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதி மன்ற கட்டளைகளையும் நீதி மன்ற பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் முன் வைத்தோம். அதாவது இந்த வெந்நீருற்றுக்களிலே தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம் அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அணைவரும் மேற்கொள்வது வழக்கம் எதிர்வரும் 31ம் திகத இந்த ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள் அப்படி தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரிகைகளை மேற் கொள்ள முடியும் என்றார்

முழு இந்து மக்களுக்குமாக கோகிலவாணி ரமனி அம்மையார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருக்கும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என சுமந்திரன் தெரிவித்தார்.