Home செய்திகள் எமது உயிர் பிரிவதற்கு முன் எம் உறவுகளை விடுதலை செய்:

எமது உயிர் பிரிவதற்கு முன் எம் உறவுகளை விடுதலை செய்:

164
0

வவுனியாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் சூழற்ச்சி முறையிலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின் 884ஆவது நாளான இன்றைய நாளில் அரசியல் கைதிகளில் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரி கண்ணீர்ப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும் , தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா? போன்ற  வாசகங்களைத் தாங்கியவாறும் கதறி அழுது, கண்ணீர்விட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இப்போராட்டத்தில் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும் அமெரிக்காவே சிங்கள ,பௌத்த ஒடுக்கு முறை ஜனநாயகத்திலிருந்து (சிங்கள அதிகார ஜனநாயகத்திலிருந்து) தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை.