Home செய்திகள் இரத்தக்கறை படிந்த அந்தோனியார் சிலை உடன் மீளத் திறக்கப்பட்ட நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்:

இரத்தக்கறை படிந்த அந்தோனியார் சிலை உடன் மீளத் திறக்கப்பட்ட நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்:

123
0

கடந்த ஏபரல் 21ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் மீள் கட்டமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் அடையாளச் சின்னமாக இரத்தக்கறை படிந்த சிறு சேதங்களூக்கு உள்ளான “அந்தோனியார் சிலை” கண்ணாடிப் பெட்டி ஒன்றுக்குள் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 114 பேரின் சடலங்களும் புதைக்கப்பட்ட புதிய கல்லறைத் தோட்டமும் நேற்று திறந்து விடப்பட்டு, வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டது.