Home தாயக செய்திகள் மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த கவிகஜன் காவல்துறையினரால் சுட்டுக் கொலை:

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த கவிகஜன் காவல்துறையினரால் சுட்டுக் கொலை:

118
0

மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் என்ற, 23 வயதுடைய இளைஞனே என்று உறவினர்கள் அடையாளம் காணப்பட்டியுள்ளனர்.

இன்று (21/07) அதிகாலை யாழ்.போதனா மருத்துவமனையில் சடலத்தை அடையாளம் காண்பித்த உறவினர் குறித்த இளைஞன் உள்ளிட்ட 6 இளைஞர்கள் நேற்றிரவு தென்மராட்சியில் இருந்து மூன்று உந்துருளிகளில் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறினார்.

மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் வீதிக் காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினர், மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு இளைஞர்களை மறித்து சோதனையிட முற்பட்ட போது, அவர்கள் காவல்துறையினர் மீது வாள்களால் தாக்க முற்பட்டதாகவும், அதையடுத்தே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினரை தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போதே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் எனவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகரவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.