Home செய்திகள் கேப்பாபுலவு மக்களை சந்தித்தது ஐ.நா.ம.உ செயற்பாட்டுக் குழு:

கேப்பாபுலவு மக்களை சந்தித்தது ஐ.நா.ம.உ செயற்பாட்டுக் குழு:

111
0

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, இன்று (21/07) சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இச் சந்திப்பு தொடர்பில் அதில் பங்கேற்ற ஒருவர் எமது ஊடகத்திற்கு தெரிவிக்கையில்;

இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், நாம் தொடர்சியாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் நியாயப்பாடு, போராடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எம்மிடம் கேட்டறிந்தனர்.

மேலும் எமது பிரச்சினைக்கு அவர்களால் உடனடியாக தீர்வு சொல்ல முடியாத நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைப்புகளுடனும் கலந்துரையாடி எமக்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தாம் உறுதுணையாக இருப்பதாக கூறிச் சென்றிருக்கின்றனர். என்றனர்.