Home தாயக செய்திகள் இரு பிரதேச சபை உறுப்பினர்களின் எதிர்ப்பால் நினைவு தூபி அமைக்க தடை!

இரு பிரதேச சபை உறுப்பினர்களின் எதிர்ப்பால் நினைவு தூபி அமைக்க தடை!

109
0

சிறீலங்கா விமானப்படையினரின் குட்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக நினைவு தூபி அமைப்பதற்கு இரு பிரதேச சபை உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தடைவிதித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரதேச மக்களால் அவ் விடத்தில் நினைவுத் தூபி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ள காரணத்தினால் நினைவு தூபி அமைப்பதற்கு பிரதேச சபை தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியில் 1999ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சு தாக்குதலில் 24 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.