Home முக்கிய செய்திகள் கைதுகளும், தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெறும்: இராணுவ தளபதி

கைதுகளும், தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெறும்: இராணுவ தளபதி

167
0

பாதுகாப்பு ஏற்பாடுகளின்போது சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம். கைதுகளும் தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெறும் என இராணுவ தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர்

“இந்த தீவிரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்த முடியாது. எங்களுக்குத் தெரியாத எதிரிகளோடுதான் நாங்கள் மோதுகின்றோம். இந்த மோதலானது வலய மற்றும் சர்வதேச ரீதியிலான மோதலாக அமைகிறது.

அதனால் இந்த நாட்டில் முழுமையான சமாதான சூழலை ஏற்படுத்துவதற்காக எவருக்கும் குறிப்பிட்ட காலத்தை சுட்டிக்காட்ட முடியாது. தீவிரவாதிகள் குறித்து காலகட்டத்தை எவராலும் அனுமானிக்கவும் முடியாது.

எனினும் எமது படையினர் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். பொதுமக்களும் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என்பதோடு தெளிவாகவும் இருக்க வேண்டும்.

24 மணிநேரமும் படையினர் தயார்நிலையில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளின்போது சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம். இருந்தாலும் தங்களுடைய பாதுகாப்பை தாங்களே கவனிக்க வேண்டும்.

நாட்டிலுள்ள நிலைமைக்கு அமைய இராணுவத்தினருக்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனினும் கைதுகளும் தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும்” என தெரிவித்துள்ளார்.