
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் தொடரூந்து மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் நேற்று இரவு 8.50 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலியான இளைஞர்கள் இருவரும் தொடரூந்து வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தின் அருகில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்ததாலேயே இவ் விபத்து நேற்ந்ததாக தெரியவருகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடரூந்து சேவை அதிகாரிகளினால் கிளிநொச்சி தொடரூந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.