Home செய்திகள் 5G விவகாரம் – யாழ். மாநகரசபை முன்றலில் மக்கள் போராட்டம்!

5G விவகாரம் – யாழ். மாநகரசபை முன்றலில் மக்கள் போராட்டம்!

112
0

யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைவரிசை திட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையற்ற ஆபத்தை விளைவிக்கும் திறன் கம்பங்கள் வேண்டாம் எனக்கோரி இன்று வியாழன் காலை 09:00 மணிக்கு யாழ். மாநகரசபை முன்றலில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையத்தின் ஏற்பாட்டில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து தம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மாநகரசபை முதல்வர் விளக்கம் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மாநகரசபை வளாகத்திற்குள் போராட்டத்திலீடுபடும் மக்கள் உள்நுழைந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.