
மன்னார் குருந்தன் குளம் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் இடிந்து உருக்குலைந்த நிலையில் ஓர் ஆலயம் இருப்பதை அறிந்த யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறையினர் அங்கு சென்று ஆராச்சிகளை மேற்கொண்ட போதே அவ் ஆலயம் 13 ஆம் நூற்றாட்டிற்குரிய பழமைவாய்ந்த ஆலயம் என தெரியவந்துள்ளது.
