Home செய்திகள் பணிப் புறக்கணிப்பில் யாழ் மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள்!

பணிப் புறக்கணிப்பில் யாழ் மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள்!

160
0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தியும், மாநகர சபை ஆணையாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணி நீக்க கடிதத்தினை மாநகரசபை ஆணையாளர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் யாழ்.மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் சுகாதார தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாது, குப்பைகள் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண மாநகர சபையின் மேற்பார்வையாளர் ஒருவருக்கும், தொழிற்சங்க தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதில், குறித்த தொழிற்சங்க தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சங்க தலைவருக்கு, மாநகர சபை ஆணையாளரினால் பணி நீக்க கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.