
கன்னியா மீட்புக்கான கண்டனப் போராட்டத்தை அகிம்சை வழியில் வழி நடாத்திய தென் கையிலை ஆதின முதல்வர் தாக்கப்பட்டமைக்கு, நடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் விகாரை அமைப்பதை தவிர்க்குமாறு தெரிவித்து போராட்டத்துக்குத் தயாரான ஆதீனத்தின் அகத்தியர் அடிகளார் மீது தேநீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கே அவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.