
யாழ்ப்பாணம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் நோயாளி ஒருவரைத் தாக்கியுள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், மருத்துவர்கள், தாதியர்கள், மற்றும் நோயாளர்கள் என அனைவருமாக மருத்துவமனைக்கு முன்னால் ஒன்றுகூடி தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவம் எதற்காக …? யாரால் மேற்கொள்லப்பட்டது என இதுவரை தெரியவரவில்லை.
