Home உலக செய்திகள் யாழ்ப்பாணத்திற்கு கடல்வழி மற்றும் ஆகாய வழி பயணிகள் சேவை: ஆர்வத்தை வெளியிட்ட இந்தியா

யாழ்ப்பாணத்திற்கு கடல்வழி மற்றும் ஆகாய வழி பயணிகள் சேவை: ஆர்வத்தை வெளியிட்ட இந்தியா

150
0

”காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதுபோன்று பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இருதரப்பு வணிக செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா  வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, சுற்றுலாத் துறைக்கும், சிறிய அளவிலான வணிகத்துக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். எனவும் தெரிவித்துள்து இந்தியா.

இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து  45.27 மில்லியன் டொலர் பெறப்பட்டு சிறிலங்கா  அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுகத்தை தரமுயர்த்தி வருவதும், பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா 300 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.