
தமிழர்களதும், இந்துக்களதும் தொன்மையும், இயற்கை எழிலும் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க திருகோனமலையின் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இருந்த 200 வருட பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து அவ்விடத்தில் புதிதாக பெளத்த தாது கோபுரம் அமைக்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவின் உத்தரவிற்கு அமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அவ்விடத்தில் விகாரை கட்டும் முயற்சி முன்னெடுக்கப்பட்ட போது பலத்த எதிர்ப்புகளால் கைவிடப்பட்டிருந்ததோடு, அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் வந்திருந்தன.
இவ் வேளையில் திடீரென விகாரை கட்டும் திட்டம் கைவிடப்பட்டு அதே இடத்தில் பெளத்த தாது கோபுரம் துரித கெதியில் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு சென்ற தென்கைலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தலைமையில் கூடிய மக்கள் நிர்மாணப் பணிகளை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, தமக்கு உயர் மட்டத்தில் இருந்து அனுமதி கிடைத்திருப்பதாகவும், தம்மை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தென்கைலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் அமைச்சர் மனோகணேசனை தொடர்புகொள்ள்அ முயற்சித்த போது அவர் தொடர்பிற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதந் மூலம் இத் திட்டமிட்ட ஆக்கிரமிப்ப்பு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தெரிந்தே நடக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
