Home செய்திகள் வலிகாமம் தையிட்டியில் புதிய விகாரை நிர்மாண பணிகள் ஆரம்பம்!

வலிகாமம் தையிட்டியில் புதிய விகாரை நிர்மாண பணிகள் ஆரம்பம்!

170
0

யாழ் மாவட்டத்தின் வலிகாம வடக்கு பதியியான காங்கேசன்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட தையிட்டி கிராமத்தில் புதிதாக விகாரை ஒன்றை மைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தநியார் காணி ஒன்றை அபகரித்தே இவ் விகாரை அமைக்கப்படுவதாக அவ் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிங்களவர்களே வாழாத இடமாக இருந்த இப் பகுதியில் விகாரை மைக்கப்பட்டு வருவது பெளத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பையும், நாடு பூராகவும் சிங்கள பெளத்த மயமாக்கும் திட்டத்தையும் வெளிக்காட்டி நிற்கிறது.

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட உள்ள பிரதேசங்கள் விடுவிக்கப் படுவதற்கு முன்னதாக அங்குள்ள மக்கள் வீடுகள், ஆலயங்கள் என்பவற்றை இடித்து தரைமட்டமாக்கியும், போரால் சிதவதைவடைந்தது போல் அரைகுறையாக இடித்தும் நாசம் செய்யப்படுவதோடு, புதிதாக ஆங்காங்கே பெளத்த விகாரைகளை அமைத்துவிட்டு அதன் பிறகே நிலங்களை பகுதி பகுதியாக மக்களிடம் ஒப்படைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.