
பிரித்தானியாவின் High Wycombe எனும் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட “உச்சி முருகன் கோவில்” இல் நாளை 14/07/2019 ஞாயிறு அன்று தமிழில் குடமுழுக்கு நடாத்தப்படவுள்ளது.
இதுவரை கலமும் இருந்து வந்த நடைமுறைக்கு முற்றிலும் மாறாக தமிழர்கள் தங்கள் கடவுளை தமது பேசு மொழியிலேயே வணங்கும் முகமாக இந்த ஆலய நிர்வாகத்தினர் இப் பெரும் முயற்சியை பல தடைகள், கஸ்டங்களுக்கு மத்தியில் முன்னெடுத்துள்ளனர்.
அது மட்டுமன்றி இவ் ஆலயத்தில் வித்தியாசமான விக்கிகங்கள் அமையப்பெற்றுள்ளதோடு, பக்தர்கள் தாங்களே கடவுளின் (விக்கிரகங்கள்) அருகில் சென்று அபிஷேகங்களை ஆராதனைகளை செய்ய முடியும் எனவும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நம்மில் பலர் தமிழில் வழிபாடு நடத்தப் படவேண்டுமென, பல்லாண்டுகளாக நமக்குள்ளேயே கதைத்து வந்தபோதும் அதற்கான முயற்சிகளை இவ் ஆலய நிர்வாகிகள் துணிந்து முன்னெடுத்து பல இடர்பாடுகளையும் தாண்டி, நடைமுறைச் சாத்தியமாக்கியுள்ளார்கள்.
உண்மையாகவே நாம் நம் தாய் மொழியில் , உலகின் மூத்த மொழியில், தலை சிறந்த இலக்கிய- இலக்கண- ஆன்மீக நூற்செல்வத்தைக் கொண்ட , நம் செம்மொழியில், கடவுளை வழிபட விரும்புகின்றவர்களாயின், நாளை (ஞாயிறு) நடக்கும் குடமுழக்கு விழாவில் பங்குபற்றி , இம் முயற்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
தமிழர்களின் முயற்சிகள் மங்கி மறைந்து போவதற்கு காரணமாக இருப்பது ஒத்துழைப்பு இன்மை என்பதையே கடந்த வரலாறுகள் கற்பித்து நின்கின்றன.
ஆலய முகவரி:
UCHI MURUGAN TEMPLE
RUTLAND AVENUE
HIGH WYCOMBE
HP12 3LL

சிந்தியுங்கள்.
கருவறையில் தமிழ்மொழியில்
கடவுளை வணங்கிடுவோம்
திருமுறைகள் வழிமொழியில்
தெய்வத்தை தொழுதிடுவோம்
நெறிமுறைகள் வழிநின்று
நித்தமும் நாம் பூசிப்போம்
குறையின்றி நம்மொழியில்
கும்பிட்டு மகிழ்வோம்
சைவநெறி தழைத்தோங்க
சங்கங்கள் அமைத்திடுவோம்
அறநெறியில் நின்றுநாம்
அரனவன் அடி தொழுவோம்
முதன்முறையாய் இலண்டனில்
முச்சங்கத் தமிழில் பூசை
நிறைவாகவிது நடந்திடவே
நாம் சென்று கைகொடுப்போம்
மறைவாக நமக்குள்ளேயே
முணுமுணுத்துப் பயனில்லை
இறைவனைஇன்தமிழில்வணங்கிட
இணைந்து இன்று வந்திடுவீர்
கருத்தினிலே எடுத்திடுவீர்
குடமுழுக்கு இந்ஞாயிறுவென்று
குறித்திடுவீர் இந்நாளைநன்றே
கண்டிடுவீர்விழாவைச் சென்றே
அன்னைத் தமிழ்மொழியால்
ஆண்டவனைப் போற்றிடுவோம்
முன்னை வழிபாடுகள் வழி
முருகனைத் துதித்திடுவோம்
உலகின் முதல் மொழியால்
உணர்வுடனே பாடிடுவோம்
உச்சிமுருகனவன் உளங்குளிர
உரிமையுடன் கூடிடுவோம்.



