
வவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது இலங்கை காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை அடுத்து இருவரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவர் தப்பித்துச் சென்றுள்ளதாகவும் இலங்கை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்துவதாக முள்ளிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.