
விகாரை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், யாழ்-நாவற்குழி பிரதேசத்தில் அவசரமாக கட்டிமுடிக்கப்பட்ட பௌத்த விகாரையொன்று நாளை (13/07) சனிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்படவுள்ளது.
புதிதாகத் திறக்கப்படவுள்ள விகாரைக்கான புனிதத் தாது, இன்று வெள்ளிக்கிழமை குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து வாகன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அறியவந்துள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையும் விகாரை கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்த தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டதுடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளதன் விளைவாகவே இப் பாரிய விகாரை தமிழர் தாயகத்தில், குறிப்பாக யாழ் நகருக்குள் உள்னுளையும் முன் செம்மணியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவிற்கும் முன்பாகவே இவ் விகாரை அமைக்கப்பட்டுள்ளமையும், யாழ் நகரும் பெளத்தர்களதே, பெளத்தர்கள் வரவேற்பது போலும் இவ் விகாரை திட்டமிட்டு நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.