Home செய்திகள் ஒரு வாரத்தில் 2280 வாகன சாரதிகள் கைது!

ஒரு வாரத்தில் 2280 வாகன சாரதிகள் கைது!

153
0

கடந்த ஒரு வாரத்தில் மாட்டும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 2280 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை கடந்த 05ம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

இலங்கையில் குடிபோதை, மற்றும் நித்திரையின்றி பணம்சம்பாதிக்கும் நோக்கில் தொடர்ச்சியாக வாகனங்களை ஓட்டுவது போன்ற செயற்பாடுகளால் சராசரி ஒரு நாளைக்கு 5 முதல் 10 பேர் வரையானோர் பலியாகிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.