
14 முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
துருக்கி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, சவுதி அரேபியா, பலஸ்தீனம், பங்களாதேஷ், குவைத், கட்டார், மாலைதீவு, ஈரான், லிபியா மற்றும் ஈராக் நாடுகளின் தூதுவர்களே இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் பின்னரான நிலமை குறித்தும் இச் சந்திப்பில் ஆராயப்பட்டதாகவும், குறிப்பாக ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல்களின் பின்னரான முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.