
மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவின் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட நளினி சற்று முன் உயர் நீதிமன்றில் ஆஜனாராகியுள்ளார்.
கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி பலமுறை இதற்கு முன்பு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி உள்ள போதும் இன்று ஆஜராகும் அவர் தானே உயர் நீதிமன்றில் வாதாட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பரோலில் வெளிவருவதற்காக நானே வாதாடுவேன் என்று நளினி கூறியிருப்பதால் அவரது வாதம் என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.