Home முக்கிய செய்திகள் 28 ஆண்டுகளின் பின்னர் விடுதலைக்கு தயாராகும் 62 ஏக்கர் நிலப்பரப்பு!

28 ஆண்டுகளின் பின்னர் விடுதலைக்கு தயாராகும் 62 ஏக்கர் நிலப்பரப்பு!

127
0

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பகுதியில் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்கும் முகமாக முதலில் காணிகளை இனம் காணும் நடவடிக்கை இன்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.

காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட நிலங்களே இவ்வாறு அளவிடப்படுகின்றன.

இவ் விடத்திலேயே (தமிழ் மன்னராட்சிக் காலத்தில்) பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க கிருஷ்ணர் ஆலயம் ஒன்றும் இருந்தமையும், (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை) அக் கோயிலை அண்மித்த பகுதிகளில் சுரங்கப் பாதைகள் இருந்தமையும், குறிப்பிடத்தக்கது.

கடந்த 28 ஆண்டுகளாக இராணூவப் பிடிக்குள் இருந்த மக்கள் நிலங்கள் விடுவிக்கப்படப் போவது அறிந்து மக்கள் அவ்விடத்தில் கூடிய போதும் சிலரை மட்டும் உள்ளே அழைத்து ஆளுனர் உரையாடியிருந்தார்.

இப் பிரதேசத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அவருக்காக பெரும் பொருட் செலவில் மாளிகை ஒன்று கட்டப்பட்டு இருந்தது என்பதும், அது தற்போது இலங்கை சுற்றுலாத்துறைக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.