Home செய்திகள் முதற் தடவையாக வடமாகாணத்தில் சிறீலங்கா காவல்துறையினர் நேர்முகத் தேர்வு!

முதற் தடவையாக வடமாகாணத்தில் சிறீலங்கா காவல்துறையினர் நேர்முகத் தேர்வு!

148
0

வட – கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளினை சிறீலங்கா காவல்துறை திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று வவுனியா கண்டி வீதியிலுள்ள காவல்துறை கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

சிறீலங்கா காவல்துறை திணைக்களத்தில் நிலவும் தமிழ் காவல்துறையினர் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் இதுவரை காலமும் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் முதற்தடைவையாக வடமாகாணத்தின், வவுனியாவில் நடைபெற்று வருவதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.