Home முக்கிய செய்திகள் முடிவிற்கு வந்த கதிர்காமர் கொலை வழக்கு:

முடிவிற்கு வந்த கதிர்காமர் கொலை வழக்கு:

162
0

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தேக நபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கதிர்காமர் கொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முத்தையா சகாதேவன் “மே”30 ஆம் நாள் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் மூன்று வாரங்களின் பின்னர் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் நாள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமடைந்திருந்தார்.

இவரது மரணமானத்தற்குப் பின்னரே HC 42/26/2008 என்ற இலக்கமுடைய கதிர்காமர் கொலை வழக்கை தொடர்ந்து நடத்துவதில்லை என்று மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.