Home செய்திகள் மீண்டும் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் மாவை:

மீண்டும் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் மாவை:

191
0

தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராஜா அவர்கள் இன்று (29/06) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ் அரசுக் கட்சியின் செயற்குழு மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் இன்றைய தினம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிரேஸ்ட துணைத் தலைவர்களாக பொ.செல்வராஜா மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரும் , துணை பொதுச் செயலாளர்கள் ப. சத்தியலிங்கம் , எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் , இணைப் பொருளார்கள் -பெ.கனகசபாபதி வ. பனகேஸ்வரன். ஆகியோரும், உப தலைவர்களாக மு.ராஜேஸ்வரன் மற்றும் துரைரத்தினசிங்கம் , இ.சாள்ஸ் நிர்மலநாதன் , த. குருகுலராஜா , சி.சிவமோகன் , அ. பரஞ்சோதி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

துணை செயலாளர்களாக எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஈ.சரவணபவான் யோகேஸ்வரன். , அரியநேந்திரன் , தண்டாயுதபாணி , சாந்திசிறீஸ்கந்தராஜா , கே.வி. தவராசா , த.கலையரசன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் மாவட்ட ரீதியிலும் 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.