Home செய்திகள் மரண தண்டனைக்குரிய பெயர் பட்டியலில் 8 தமிழர்!

மரண தண்டனைக்குரிய பெயர் பட்டியலில் 8 தமிழர்!

153
0

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதில் 8 தமிழர்களும் உள்ளடங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

தூக்கு தண்டனைக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் 20 பேரில் 08 தமிழர்கள், 8 முஸ்லிம்கள், மற்றும் 04 சிங்களவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் சிங்களவர்கள் இருவருக்கும், ஒரு தமிழர் மற்றும் ஒரு முஸ்லிம் ஆகிய நால்வருக்கே முதலில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அத்தோடு இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஒரு பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட பட்டியலுக்கு அமைய …

எம்.கே.பியதிலக்க, எம்.தர்மகரன், எம்.எஸ்.எம்.மஸ்தார், ஜே.ஏ.பூட், பி.ஜே.போல்சிம், எஸ்.புண்ணியமூர்த்தி, கே.எம்.சமிந்த, எஸ்.கணேசன், டபிள்யு.விநாயகமூர்த்தி, எஸ்.ஏ.சுரேஷ்குமார், எம்.குமார், எஸ்.மசார், டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா, எஸ்.முஹம்மது ஜான், பெருமாள் கணேசன், ஆர்.பி.சுனில் கருணாரத்ன, சையித் முகமது உவைஸ், எம்.எஸ்.எம்.மிஸ்வர், பி கமிலஸ் பிள்ளை, ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல் ஆகியோருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.