Home செய்திகள் இந்திய மீனவர் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது!

இந்திய மீனவர் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது!

189
0

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தீவகம், நெடுந்தீவு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் சிவகங்கை மாவட்ட்ங்கழளைச்  சேர்ந்த 44 வயது முதல் 54 வயது மதிக்கத்தக்கவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் என யாழ் நீரியல் வள திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.