Home செய்திகள் எங்கள் உரிமைகள் மதிக்கப்பட்டு அதனடிப்பட்ஐயில் அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும்: இரா.சம்பந்தன்

எங்கள் உரிமைகள் மதிக்கப்பட்டு அதனடிப்பட்ஐயில் அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும்: இரா.சம்பந்தன்

221
0

அபிவிருத்தியின் பெயரில், உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் அபிவிருத்திகள் பெற்றால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் திருகோணமலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற தொண்டராசிரியர்களாகப் பணியாற்றியோருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில், கிழக்கு மாகாணத்தில் 739 தொண்டர் ஆசிரியர்களுக்கும், வடக்கு மாகாணத்தில் 380 தொண்டர் ஆசிரியர்களுக்கும் 1119 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.

தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இன்று வடக்கு, கிழக்கில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெறுகின்றன. அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.

ஆனால் அபிவிருத்தியின் பெயரில், உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் அபிவிருத்திகள் பெற்றால் சிறப்பாக இருக்கும்.

ஒரு காலத்தில் அவர்கள் வடக்கு கிழக்கில் பாரிய சேவையை ஆற்றினார்கள். விசேடமாக யுத்தம் காரணமாக மக்கள் குடிபெயர்ந்து, ஆசிரியர்கள் குடிபெயர்ந்து, பாடசாலைகள் குடிபெயர்ந்து பல்வேறு சிரமங்களை அனுபவித்தபோது தங்களது கடமைகளையாற்றியவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

நாங்கள் எல்லோரும் உங்களுக்கு இந்த நியமனம் கிடைப்பதையிட்டு சந்தோசமடைகின்றோம். அதே போன்று நீங்களும் ஆக்கபூர்வமாகக் கடமையாற்ற்ககூடிய நிலைமையை அடைய வேண்டும். அடையவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் அதில் ஏதும் குறைகள் இருக்குமாக இருந்தால், அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உங்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தகையையை நீங்கள் முழுமையாகப் பெறவேண்டும்.

அதற்குரிய திட்டத்தை அரசாஙக்கம் வகுத்து, குறிப்பாக கல்வி அமைச்சு வகுத்து தொண்டராசிரியர் நியமனம் பெற்றவர்கள் சிறப்பாக கடமையாற்றுவதற்கு பயிற்சிகள் வழங்க வேண்டும். என மேலும் தெரிவித்துள்ளார்.