Home முக்கிய செய்திகள் தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கும் இராணுவத் தளபதி – உண்மைகள் வெளிவருமா?

தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கும் இராணுவத் தளபதி – உண்மைகள் வெளிவருமா?

148
0

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முன்னிலையாகி தற்போது அங்கு சாட்சியம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணிலையும், முஸ்லீம் அமைச்சரகளையும் பாதுகாக்கவே நாடாளுமன்ற தெரிவுக் குழு முனைவதாக கூறி சாட்சியமளிக்க செல்லவேண்டாம் என மஹிந்த அணியினர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவை தடுத்த போது அதை மீறி இன்று சாட்சியம் அளித்துவருவது குறிப்பிடத்தகது.

இதனால் நடைபெற்ற ஈஸ்ரர் தினக் குண்டுத்தாக்குதல்கள் மஹிந்த, மைத்திரி கூட்டு திட்டமிடலில் நடாத்தப்பட்டதா என்ற சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன.