Home செய்திகள் ஜூன் 29,30 – யாழில், தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு:

ஜூன் 29,30 – யாழில், தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு:

134
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் ஜூன் 29,30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

பெண்கள், இளையோர், பேராளர் உள்ளடங்கலாக மூன்று பிரிவுகளாக இம் மாநாடு முதல் நாள் நல்லூர் இளங்கலைஞ்ஞர் மண்டபத்திலும், இரண்டாம் நாள் யாழ் வீரசிங்கம் மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணித் தலைவி திருமதி மதினி நெல்சன் தலைமையில் மாதர் முன்னணி மாநாடும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் வாலிப முன்னணி மாநாடும் சனிக்கிழமை (29/06/2019) நல்லூர் இளங்கலைஞ்ஞர் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

மறு நாள் (30/06/2019) ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள பேராளர் மாநாடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.