Home செய்திகள் இரணுவ வாகனத்தை மோதிய தொடரூந்து – 4 இராணுவத்தினர் பலி!

இரணுவ வாகனத்தை மோதிய தொடரூந்து – 4 இராணுவத்தினர் பலி!

139
0

கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இராணுவத்தினர் நால்வர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடரூந்துக் கடவையை கடக்க முயன்ற இராணுவ (றக்) வாகனத்தை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி தொடரூந்து மோதியதிலேயே மேற்படி விபத்து நடந்துள்ளது.

இவ் விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.