Home தாயக செய்திகள் வடக்கை வாட்டும் வறட்சி – இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு!

வடக்கை வாட்டும் வறட்சி – இரண்டரை இலட்சம் பேர் பாதிப்பு!

121
0

இலங்கையில் தொடரும் வறட்சியான காலநிலையினால் சுமார் நான்கு இலட்சத்திற்க்உம் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ் எண்ணிக்கையில் கடும் வறட்சிக்குள்ளாகியுள்ள வடமாகாணத்தில் மட்டும் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் குடி நீர் கூட இன்றி அவதிப்படுவதையும், பல மைல் தூரம் சென்று மக்கள் நீர் எடுத்துச் செல்வதையும் காண முடிகிறது. வறட்சி காரணமாக வடக்கில் அதிகளவான கால்நடைகள் இறக்கும் நிலை அதிகரித்துச் செல்கிறது. அத்தோடு விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பல குடும்பங்கள் இவ் வறட்சிக் கால நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 21,078 குடும்பங்களைச் சேர்ந்த 70,595 பேரும், 

மன்னார் மாவட்டத்தில் 18,074 குடும்பங்களைச் சேர்ந்த 63,115 பேரும் 

கிளிநொச்சி மாவட்டத்தில் 5,299 குடும்பங்களைச் சேர்ந்த 18,850 பேரும் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,766 குடும்பங்களைச் சேர்ந்த 40,093 பேரும் 

கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 22,513 குடும்பங்களைச் சேர்ந்த 74,435 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.