Home செய்திகள் யாழ், மன்னார், மற்றும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகன ஊர்வலங்கள் சற்று முன் ஆரம்பம்:

யாழ், மன்னார், மற்றும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகன ஊர்வலங்கள் சற்று முன் ஆரம்பம்:

158
0

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருளுக்கு எதிரான வாகன ஊர்வலங்கள் யாழிலிருந்தும், வவுனியாவிலிருந்தும் கிளிநொச்சி நோக்கி ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இருந்து சற்றுமுன்னர் கிளிநொச்சி நோக்கி ஆரம்பிக்கப்பட்ட வகன ஊர்வலத்தை யாழ், மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் ஆரம்பித்து வைத்தார்.

அதே போல் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய வாகன ஊர்வலத்தை வவுனியா மாவட்டச் செயலர் ஐ.எம். ஹனீபா ஆரம்பித்து வைத்தார்.

மன்னார் மாந்தை சந்தியில் இருந்தும் ஆரம்பமான வாகன ஊர்வலம் கிளிநொச்சியை நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.