Home உலக செய்திகள் சுவிஸ் நாட்டில் – தேசிய செயற்பாட்டாளர் மீது தாக்குதல்!

சுவிஸ் நாட்டில் – தேசிய செயற்பாட்டாளர் மீது தாக்குதல்!

172
0

சுவிஸ் நாட்டில் தேசிய செயற்பாடுகளை தலைமை தாங்கி முனின்று நடாத்தும் செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதில் கடுமையான காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி மீதே நேற்று முந்தினம் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துடுப்பாட்டத்திற்கு பயனடுத்தும் மட்டை (Cricket Bat) இனால் தலையின் பின்புறமும், முகத்திலும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் தலையின் ஒரு பகுதி வெடித்துள்ளதாகவும், முகத்திலும் காயமும், பாரிய வீக்கமும் காணப்படுவதாகவும் எமது சுவிஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

காயமுற்ற ரகுபதி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் அவர் கதைக்கமுடியாத நிலையிலேயே உள்ளதாக அறியமுடிகிறது.

2009 இன் பின் விடுதலைப்புலிகளிற்கான செயற்பாட்டுக் கட்டமைப்புக்களின் செயற்பாடுகள் பல நாடுகளில் செயல்வடிவம் குறைந்தும் பிளவுகள் ஏற்பட்ட போதும் சுவிஸ் நாடு ஒன்றே தனது கட்டமைப்பை குலையவிடாது முன்பு போல் தொடர்ச்சியாக தமது பணிகளை செய்தும் வந்திருந்தது.

அத்தோடு மக்களிடம் பெற்ற கடன் மீளளிப்பிற்காக சுவிஸ் கிளை செயற்பாட்டாளர்கள் தமது நேரங்களை ஒதுக்கி மக்களின் பொது நிகழ்வுகளுக்கு உணவு தயாரித்து வழங்கி அதனூடாக கிடைக்கும் பணத்தை பங்கீடு செய்து மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மீளளித்தும் வந்திருந்தமை காரணமாக மக்களிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தது.

எப்போதும் போராளிகளதும், மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்றிவந்த சுவிஸ் கிளைக்கு தலைமை தாங்கி வந்தவர் ரகுபதி அவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.