Home முக்கிய செய்திகள் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் 19 வருடங்களாக சிறையில் இருந்த நபர் மரணம்!

குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் 19 வருடங்களாக சிறையில் இருந்த நபர் மரணம்!

125
0

கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதியான 61 வயதுடைய முத்தையா சகாதேவன் நேற்று உயிரிழந்துள்ளார்.

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சந்தேகநபராக கைது செய்யப்பட்ட கொழும்பு – தெமட்டகொட பகுதியை சேர்ந்த மு.சகாதேவன் சுகவீனம் காரணமாக நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு எதிரான வழக்கு இழுத்தடிக்கப்பட்ட நிலையில் உள, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த இவர் இதுவரை இவர் மீதான குற்ரங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் சந்தேகநபராகவே உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.