Home செய்திகள் குச்சவெளியில் தமிழ் இளைஞ்ஞர்கள் இருவர் விபத்தில் பலி!

குச்சவெளியில் தமிழ் இளைஞ்ஞர்கள் இருவர் விபத்தில் பலி!

174
0

திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதியில், புடவைக்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

குச்சவெளி செந்தூர்-மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த கே சுகந்தன் (18 வயது) மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த ஆர். நிரோசன் (28 வயது) ஆகியோரே விபத்தில் உயிரிழந்தவர்கள் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்தனர்.

குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவருமாக நேற்று மாலை புடவைகட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.