Home முக்கிய செய்திகள் கைவிடப்பட்டது கல்முனைப் போராட்டம்!

கைவிடப்பட்டது கல்முனைப் போராட்டம்!

150
0

அம்பாறை – கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளான இன்று நண்பகல் தற்காலிகமாக முடிவிற்கு வந்துள்ளது.

இன்றும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெருந்திரளான மக்களும், அரசியல்வாதிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே பலரின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு மாத கால அவகாசத்துடன் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இன்று நிறுத்தியுள்ளனர்.

உண்ணாவிரதத்தை கைவிட்டவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மூன்றுமாத கால அவகாசம் கோரி போராட்டத்தை கைவிடுமாறு நேற்று முந்தினம் பிரதமர் ரணிலின் கூற்றை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் இன்று ஒரு மாத கால அவகாசம் வழங்கி போராட்டத்தை நிறைவிற்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை முடிவு கிடைக்கும் வரை நால்வர் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.