Home செய்திகள் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்!

மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்!

139
0

கடந்த ஏப்ரல் 21 அன்று நடாத்தப்பட்ட பல தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து உடனடியாக அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தால் நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளிப்பட்டது.

அத் தாக்குதல் தொடர்பான ஆரவாரங்கள், அச்சங்கள் அனைத்தும் ஒரு மாதகாலப் பகுதிக்குள்ளேயே இல்லாமல் போயுள்ள நிலையில் கடந்த மாதமும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மக்களும், அரசியல்வாதிகளும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த போது அதைக் கண்டுகொள்ளாத அரசு, இம் மாதமும் அதனை புதுபித்து அடுத்த 30 நாட்களுக்கு நீடித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சம்பவங்கள் இஇலங்கையில் பிரதான கட்சிகளின் உயர்மட்டத்திற்கு தெரிந்தே நடந்தன என்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தம்மை பாதுக்காத்துக் கொள்ளவும், கொந்தளீப்போரை அடக்கவும் இவ் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாகவே தெரிகிறது.