Home செய்திகள் வடக்கு ஆளுநரின் செயலாளராக சி.சத்தியசீலன் நியமனம்!

வடக்கு ஆளுநரின் செயலாளராக சி.சத்தியசீலன் நியமனம்!

153
0

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த சி.சத்தியசீலனை தனது புதிய செயலாளராக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை காலமும் வடக்கு ஆளூநரின் செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளூநர்களாக பதவி வகித்த நான்கு ஆளுநர்களுக்கு எல்.இளங்கோவன் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவரின் திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.