Home செய்திகள் கலவரம் தோன்றும் அபாய நிலையில் கல்முனை!

கலவரம் தோன்றும் அபாய நிலையில் கல்முனை!

189
0

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதத் தலைவர்களும், மக்களும் இணைந்து கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நான்காவது நாளாக தொடரும் நிலையில் அதற்கு எதிராக “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாம்” எனக் கோரி முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று வியாழக்கிழமை காலை ஒன்றுகூடிய முஸ்லிம்கள், இவ்வாறு போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.

பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி சர்வமத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே முஸ்லிம் தரப்பினரால் இவ் சத்தியாகிரக போராட்டம் நடாத்தப்படுகிறது.

இதனால், பாரிய கலவரம் தோற்றுவிக்கப்படும் அபாய நிலை காணப்படுவதனால் கல்முனை நகரம் முழுவதும் பெருமளவு இராணுவத்தினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.