Home செய்திகள் தமிழ்த் தேசிய உணர்வாளர் இயக்குனர் மணிவண்ணனின் 6ம் ஆண்டு நினைவு இன்று:

தமிழ்த் தேசிய உணர்வாளர் இயக்குனர் மணிவண்ணனின் 6ம் ஆண்டு நினைவு இன்று:

187
0

நடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றிய ஒருவர்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும், தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார்.

தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த அவர், உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார்.

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும்இ நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்துஇ அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.

இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர்இ ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

1982ல் தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர்.

மணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், புடவை வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார்.

அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே சத்யராஜ் அவர்கள்.

கல்லூரியில் படிக்கும் போது பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

திரையுலகப் பிரவேசம்

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார் மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

திரையுலக வாழ்க்கை

1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.