Home செய்திகள் முப்படையினரின் சோதனைக் கெடுபிடி – அன்றாட வாழ்வில் மக்கள் பெரும் அவதி!

முப்படையினரின் சோதனைக் கெடுபிடி – அன்றாட வாழ்வில் மக்கள் பெரும் அவதி!

205
0

நாட்டில் தற்கொலைத் தாக்குதல் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலையிலும் வவுனியா நகரில் படையினரின் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குனின்றனர்.

வவுனியா வைத்தியசாலையிலுள்ள படையினர் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தலைக்கவசத்தையும் வெளியே வைத்துவிட்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை, நகர பள்ளிவாசலுக்கு முன்பாக வீதியிலுள்ள படையினரால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.