
பெண்ணைப் போல் ஆடைகளை அணிந்து கொண்டு நடமாடிய ஆண் ஒருவரை தலவாக்கலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள குடியிருப்புகளின் பின்புறமாக நடமாடும் சத்தத்தைக் கேட்ட பிரதேச மக்கள் அச்சமடைந்ததோடு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவலை வழங்கியதை அடுத்தே காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் அந்நபர் இரவு நேரத்தில் மாறு வேடத்தில் நடமாடியமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.