Home தாயக செய்திகள் புதிய கடற்படைத் தளபதியுடன் ஆளுநர் சுரேன் சந்திப்பு!

புதிய கடற்படைத் தளபதியுடன் ஆளுநர் சுரேன் சந்திப்பு!

163
0

வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று  காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

நேற்றைய தினம் (13/06) வலி வடக்கு பிரதேசத்திற்கு திடீர் விஜம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்த ஆளுநர் சுரேன் இன்று கடற்படை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்ரைய விஜயத்தின் போது காங்கேசன்துறையில் உள்ள பிரபல பாடசாலையான நடேஸ்வராக் கல்லூரிக்கும் சென்றிருந்தார். இவருடன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் உடன் சென்றிருந்தார்.

கடற்படை கட்டளைத் தளபதியுட்அனான இன்றைய சந்திப்பின்போது வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த ஆளுநர் கடற் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும், வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் கடற்படையினருக் குமிடையில் சுமூகமான நிலைமைகளை கட்டியெழுப்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாக அறியவந்துள்ளது.

சந்திப்புக்களும், கோரிக்கைகளும் அவ் அப்போது நடைபெற்றாலும் 10 ஆண்ட்கள் கடந்தும் காணிவிடுவிப்பு மந்தகதியில்யே இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.